உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போலீஸ் மீது ஆட்டோ ஏற்றியவர் கைது

போலீஸ் மீது ஆட்டோ ஏற்றியவர் கைது

சென்னை : சென்னை பெரம்பூர், பெரியார் நகரில் கடந்த 24ம் தேதி, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த போக்குவரத்து காவலர் சரஸ்வதி,34, பணியில் இருந்தார்.அப்போது, ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், 'மாற்றுப் பாதையில் செல்ல முடியாது' எனக் கூறி, சரஸ்வதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், தகாத வார்த்தையால் திட்டி, ஆட்டோவை அவரது கால் மீது ஏற்றியுள்ளார். இதில், சரஸ்வதிக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், இதுகுறித்து, பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்படி, ஆட்டோ பதிவு எண் மற்றும் அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி கேமரா' பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் தொடர்புள்ள புழல், டேவிட் ஜெயவேல் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார்,55, என்பவரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ