உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலை அருகே கிடந்த மர்ம பார்சலால் பரபரப்பு

சாலை அருகே கிடந்த மர்ம பார்சலால் பரபரப்பு

திருப்போரூர்:திருப்போரூர் ஆறுவழிச்சாலை ஓரம், நேற்று காலை மர்ம பார்சல்ஒன்று கிடந்தது. அவ்வழி யாக சென்றவர்கள், அதுகுறித்து திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மர்ம பார்சலை சோதனை செய்தனர்.அந்த பார்சலில், 500 எண்ணிக்கையில் கோணி பைகள் கொண்ட பண்டலாக இயந்திரத்தில்பேக்கிங் செய்யப்பட்டு இருந்தது.சாலையில் சென்றவாகனங்களிலிருந்து தவறி கீழே விழுந்திருக்கலாம் என, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக் கின்றனர். முன்னதாக, இந்த மர்ம பார்சலில், 4,999 கோடி ரூபாய் இருப்பதாக,சமூக வலைதளத்தில் வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்