உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருக்கழுக்குன்றம் வாரச்சந்தை ரூ.14 லட்சத்திற்கு ஏலம்

திருக்கழுக்குன்றம் வாரச்சந்தை ரூ.14 லட்சத்திற்கு ஏலம்

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில் உள்ள முத்திகைநல்லான்குப்பம் பகுதியில், செவ்வாய்தோறும் வாரச்சந்தை நடத்தப்படுகிறது. மீன், கருவாடு விற்பனை, மாடு விற்பனை உள்ளிட்ட வியாபாரங்கள், இங்கு நடக்கின்றன.இச்சந்தையை தனியார் நடத்த, பேரூராட்சி நிர்வாகம் ஆண்டுதோறும் பொது ஏலம் நடத்தி, தனியாரிடம் குத்தகைக்கு அளிக்கும்.தற்போது, நடப்பாண்டு ஆக., 1ம் தேதி முதல், 2027 ஜூலை 3ம் தேதி வரையிலான மூன்றாண்டுகள் நடத்த, தனியாரிடம் குத்தகை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பேரூராட்சித் தலைவர் யுவராஜ் கூறும்போது, நடப்பாண்டிற்கு, 14.03 லட்சம் ரூபாய்க்கு, தனியார் குத்தகைக்கு அளித்துள்ளதாகவும், ஆண்டிற்கு 5 சதவீதம் குத்தகை தொகை உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி