உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை விவசாயிகளுக்கு விதை கரும்பு உற்பத்தி பயிற்சி

செங்கை விவசாயிகளுக்கு விதை கரும்பு உற்பத்தி பயிற்சி

மதுராந்தகம்:படாளம் அருகே மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. நேற்று, கரும்பு விவசாயிகளுக்கு, விதை கரும்பு உற்பத்திக்கான பயிற்சி நடந்தது.மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் செயல் ஆட்சியர் தமிழ்ச்செல்வி தலைமையில், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தி குழுவினருக்கு, கடலுார் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.இதில், கரும்பு ரகங்களை தேர்வு செய்தல், விதை கரும்பு தேர்வு மற்றும் கரும்பு மகசூல் உயர்த்துவது குறித்து, ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் சசிகுமார் எடுத்துரைத்தார்.உர பயன்பாடு, ஊடுபயிர் மற்றும் கரும்பு பூஸ்டர் குறித்தும், விதை கரும்பு தேர்வு, ஒருபரு கரணை தயாரித்தல் மற்றும் விதை நேர்த்தி குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.மண்ணின் தன்மை மற்றும் உரத்தின் தேவை குறித்தும், கரும்பில் பூச்சி மற்றும் நோய்களை கண்டறிதல், அவற்றின் அறிகுறிகள், அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் விதை நேர்த்தியின் அவசியம் குறித்து, கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர்கள் ஜெயச்சந்திரன், அனிதா, பாபு, துரைசாமி, ராஜகுமார் ஆகியோர் எடுத்துரைத்தனர்.இப்பயிற்சி முகாமில், 60 கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர். இப்பயிற்சியில், ஆலையின் கரும்பு பெருக்கு அலுவலர் ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி