உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இணையத்தில் பதியாத பட்டா உய்யாலிகுப்பம் மீனவர்கள் புகார்

இணையத்தில் பதியாத பட்டா உய்யாலிகுப்பம் மீனவர்கள் புகார்

புதுப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த வாயலுார் ஊராட்சியில், உய்யாலிகுப்பம் மீனவர் பகுதி உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பு பாதிப்பால், மீனவர்களின் வீடுகள் கடலில் மூழ்கின.இதையடுத்து, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தனியார் இடத்தை கையகப்படுத்தி, மீனவருக்கு வழங்கி, அனுபவ சான்றளித்தது. அதன்பின், கடந்த 2004ல் சுனாமி தாக்குதலைத் தொடர்ந்து, தன்னார்வ நிறுவனங்கள், அவர்களுக்கு வீடுகள் கட்டி ஒப்படைத்தது.சுமார் 20 ஆண்டுகளாக இங்கு வசித்து வரும் மக்களுக்கு, வீட்டுமனைப் பட்டா இதுவரை அளிக்கப்படவில்லை. இதுகுறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த ஜன.,ல் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கி, எட்டு மாதங்கள் கடந்தும், வருவாய்த்துறை இணையத்தில் அவை பதிவேற்றப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, மீனவர்கள் கூறியதாவது:புதிதாக வீடு கட்ட அனுமதி, வங்கி கடன் பெறுவது ஆகியவற்றுக்காக, பட்டா உண்மை தன்மை குறித்து பரிசோதிக்கப்படும். ஆனால், பட்டா வழங்கிய அதிகாரிகள், இணையத்தில் பதிவேற்றாமல் தாமதப்படுத்துகின்றனர்.அரசு திட்டங்களை பெறுவது சிக்கலாக உள்ளது. எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாக்களை, இணையத்தில் பதிவேற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை