உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பார்வையாளர் வளாகம் பயனின்றி வீண்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பார்வையாளர் வளாகம் பயனின்றி வீண்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், பல்வேறு சிகிச்சைகளுக்கு வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில், தாய் - சேய் நலப்பிரிவிற்கு, நிறைமாத கர்ப்பிணியர் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களுடன் வந்த உறவினர்கள், மருத்துவமனை வளாகத்தில் வெளியில் தங்குகின்றனர். இவர்களுக்கு போதிய இடவசதி இல்லாததால், நோயாளிகளின் உறவினர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால், தாய் - சேய் நலப்பிரிவிற்கு வரும் பார்வையாளர்களுக்கு, தனியாக கட்டடம் கட்டித்தர வேண்டும் என, மருத்துவமனை நிர்வாகம், கலெக்டர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர். இதே வளாகத்தில், தனியார் நிறுவனம் சார்பில், அதன் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், ஒரு கோடி ரூபாய் நிதியில், தாய் - சேய் நலப்பிரிவிற்காக, பார்வையாளர்கள் தங்கும் வளாக கட்டடப் பணி, கடந்த ஆண்டு துவங்கியது.தற்போது, அனைத்து பணிகளும் முடிந்து, கட்டடம் தயார் நிலையில் உள்ளது. ஆனால், இதுவரை அக்கட்டடம் திறக்கப்படாததால், மக்கள் பயன்பாடிறி பூட்டியே கிடந்து வீணாகிறது.எனவே, அந்த பார்வையாளர் தங்கும் வளாக கட்டடத்தை திறந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை