உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாக்கம் பூங்கா படுமோசம் சீரமைப்பு பணி எப்போது?

பாக்கம் பூங்கா படுமோசம் சீரமைப்பு பணி எப்போது?

மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்டது, பாக்கம் ஊராட்சி. சென்னை - - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள பாக்கம் ஊராட்சியில் அஞ்சுரம்மன் கோவில் அமைந்துள்ளது.கோவில் அருகே உள்ள காலி இடத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் வாயிலாக, கனிமவள நிதியின் கீழ், 2021 -- 22ல், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது.இதில், சிமென்ட் கல் நடைபாதை, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கால்நடைகள் உள்ளே வராதவாறு பூங்காவை சுற்றி, இரும்பு கம்பிகள் வாயிலாக முள்வேலி அமைக்கப்பட்டது.தற்போது பூங்கா வளாகத்தில் புற்கள் வளர்ந்து, விஷ ஜந்துக்கள் தங்கும் இடமாக மாறியுள்ளது. மரத்தின் காய்ந்த இலை சறுகுகள், பிளாஸ்டிக் குப்பை, அப்புறப்படுத்தப்படாமல் நிறைந்து காணப்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர், பூங்காவை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை