உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நெரும்பூர் ஆரம்ப சுகாதார மையத்தில் சீரழிவு கட்டடங்கள் இடிக்கப்படுமா?

நெரும்பூர் ஆரம்ப சுகாதார மையத்தில் சீரழிவு கட்டடங்கள் இடிக்கப்படுமா?

நெரும்பூர்:திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூரில், ஆரம்ப சுகாதார மையம் இயங்குகிறது. நெரும்பூர், இரும்புலிச்சேரி, பாண்டூர், நல்லாத்துார், சூராடிமங்கலம் உள்ளிட்ட பகுதியினர், காய்ச்சல், காயம், மகப்பேறு சிகிச்சை பெறுகின்றனர்.இம்மையத்திற்கு, 20 ஆண்டுகளுக்கு முன், சுகாதார மையம், குடியிருப்பு என, புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. அவற்றை தரமாக கட்டாததால், துவக்க நிலையிலேயே சுவரில் விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சு பெயர்ந்து சேதமானதாகக் கூறப் படுகிறது. இதையடுத்து,மற்றொரு கட்டடம் கட்டப்பட்டு, தற்போது சுகாதார மையம் புதிய கட்டடத்தில் இயங்குகிறது.பழைய கட்டடங்கள் மிகவும் சீரழிந்து, சுற்றிலும் புதர் சூழ்ந்து, பாழடைந்த நிலையில் உள்ளது. அதனால், அப்பகுதி முழுதும், விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறி, புதிய கட்டடத்திலும் புகுகிறது. அதனால், சிகிச்சைக்கு வருவோர் அச்சத்தில் தவிக்கின்றனர்.பழைய கட்டடங்களை இடித்து அகற்ற, மருத்துவ நிர்வாகத்திடம் தொடர்ந்து பரிந்துரைத்தும், அந்நிர்வாகம் அலட்சியமாகஉள்ளது.மருத்துவ வளாகத்தில் நோயாளிகளின் பாதுகாப்பு கருதி, பாழடைந்த பழைய கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ