மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
1 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
1 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
1 hour(s) ago
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், படூர் ஊராட்சி சென்னைக்கு அருகில் அமைந்துள்ள புறநகர் பகுதியாகும். இப்பகுதி, தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனை, வணிக கடைகள் என வளர்ச்சியடைந்துஉள்ளது. படூர்,- ஓ.எம்.ஆர்., சாலையிலிருந்து ஊருக்குள் செல்லும் பிரதான சாலையின் குறுக்கே, புறவழிச்சாலை செல்கிறது. இந்த புறவழிச்சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.படூர் ஊருக்குள் செல்லும் பிரதான உள்சாலையின் குறுக்கே புறவழிச்சாலை செல்வதால், வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சாலையை கடந்து செல்கின்றனர்.எனவே, இச்சந்திப்பு சாலையில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கவும், போக்குவரத்தை சீரமைக்கவும் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவை செயல்பாட்டில் இல்லாததால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன.எனவே, வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து செல்லவும், எச்சரிக்கையுடன் இருக்கவும், முதற்கட்டமாக எச்சரிக்கை சிக்னல் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago