உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலை வளைவு பகுதியில் தடுப்பு அமைக்கப்படுமா?

சாலை வளைவு பகுதியில் தடுப்பு அமைக்கப்படுமா?

செய்யூர், : செய்யூர் அருகே வடக்கு செய்யூர் - நெல்வாய்பாளையம் செல்லும், 12 கி.மீ., அளவுடைய தார் சாலை உள்ளது. வீரபோகம், ஆக்கினாம்பட்டு, மடையம்பாக்கம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.வடக்கு செய்யூர் பகுதியில், இந்த சாலையில் அபாயகரமான வளைவுப் பகுதி உள்ளது. இந்த வளைவுப்பகுதியில் சாலை ஓரத்தில் தடுப்பு இல்லாததால், இரவு நேரத்தில் வாகனங்கள் அதிவேகமாக வளைவு பகுதியை கடக்கும்போது, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன.இதனால், பெரும்பாலான வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடக்கும் போது அச்சமடைகின்றனர்.எனவே, பெரும் விபத்து ஏற்படுவதற்குள், சாலை ஓரத்தில் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ