உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மகளிர் சுய உதவி குழுவிடம் கட்டடம் ஒப்படைக்கப்படுமா?

மகளிர் சுய உதவி குழுவிடம் கட்டடம் ஒப்படைக்கப்படுமா?

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட அனந்தமங்கலம் ஊராட்சியில், கட்டி முடிக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழு கட்டடம் திறக்கப்படாமல், பயன்பாடு இன்றி உள்ளது.அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, 59 ஊராட்சிகளில் மகளிர் சுய உதவிக்குழு செயல்பட்டு வருகிறது.மகளிர் குழுக்கள் வாயிலாக தயாரிக்கப்படும் தின்பண்டங்கள், சிறுதானிய உணவு வகைகள், கைவினைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யவும், காட்சிப்படுத்தவும் அவர்களுக்கெனெ தனிக்கட்டடம் இல்லை.இதன் காரணமாக, தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் வாயிலாக, 2019 -- 20ல் மகளிர் சுய உதவி குழு கட்டடம், 75.78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பணி ஆரம்பிக்கப்பட்டது.கடந்த நான்கு ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது, அனைத்து பணிகளும் முடிவுற்றும், மகளிர் சுய உதவி குழு கட்டடம் திறக்கப்படாமல் மூடியே உள்ளது.மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய முடியாமல், அவர்கள் அவதிப் படுகின்றனர்.எனவே, இக்கட்டடத்தை திறந்து, மகளிர் சுய உதவி குழுவிடம் ஒப்படைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ