உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வி.ஏ.ஓ., அலுவலகம் பாழ் புது கட்டடம் அமையுமா?

வி.ஏ.ஓ., அலுவலகம் பாழ் புது கட்டடம் அமையுமா?

மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியம், முன்னுாத்திக்குப்பம் ஊராட்சியில், கிராம நிர்வாக அலுவலக கட்டடம் உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்டு விழுதமங்கலம், முள்ளி, கத்தரிச்சேரி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இக்கட்டடம் கட்டப்பட்டது. பழமையான கட்டடம் என்பதால் சேதமடைந்து, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.இதனால், மழைக்காலங்களில் கிராம நிர்வாக பதிவேடுகள், ஆவணங்களை பாதுகாப்பதில் பெரும் சிரமமாக உள்ளது. எனவே, தற்காலிகமாக நுாலக கட்டடத்தில், வி.ஏ.ஓ., அலுவலகம் மாற்றப்பட்டு உள்ளது.எனவே, பழைய கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, அதே பகுதியில் புதிதாக கிராம நிர்வாக அலுவலர் கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை