உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூவத்துார் பஜார் வீதியில் வடிகால் வசதி அமையுமா?

கூவத்துார் பஜார் வீதியில் வடிகால் வசதி அமையுமா?

கூவத்துார்:கூவத்துார் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை அருகே பஜார் வீதி உள்ளது. பஜார் வீதியின் இரண்டு புறங்களிலும், மளிகை கடை, நகைக்கடை, ஜவுளிக்கடை, பால் கடை, காய்கறி கடை என, நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன..கூவத்துார் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான காத்தான்கடை, கடலுார், நெற்குணம்பட்டு, வடபட்டினம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை வாங்க, பஜார் வீதிக்கு வந்து செல்கின்றனர்.பஜார் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், மழைக் காலத்தில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.மேலும், சாலை மட்டத்தை விட, 20க்கும் மேற்பட்ட கடைகள் தாழ்வான பகுதியில் உள்ளதால், மழைநீர் கடைகளில் புகுந்து, வியாபாரிகள் அவதிப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, கூவத்துார் பஜார் வீதியில், மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை