| ADDED : ஆக 17, 2024 08:33 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்தகளத்துார் கிராமத்தில், பவுண்டு தெருவில் உள்ள வீட்டில், கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யபொபடுவதாக, செங்கல்பட்டு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, செங்கல்பட்டு மது விலக்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் ஆய்வு செய்த போலீசார், பொன்விளைந்தகளத்துார் கிராமத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட ரமேஷ் என்பவரின் மனைவி குணசுந்தரி, 42, என்பவரை கைது செய்தனர்.குணசுந்தரியின் வீட்டில் நடத்திய சோதனையில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 48 மது பாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் கைது செய்ய முயன்றபோது, குணசுந்தரி உடல்நிலை சரியில்லாமல் மயங்கியதால், அவரை போலீசார் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.