உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாம்பாக்கத்தில் மகளிர் தின விளையாட்டு போட்டிகள்

மாம்பாக்கத்தில் மகளிர் தின விளையாட்டு போட்டிகள்

திருப்போரூர், திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் ஊராட்சியில், தமிழக வெற்றி கழகம் சார்பில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின விழா மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தன.இதில், மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் வீரா தலைமை வகித்தார். திருப்போரூர் சட்டசபை தொகுதி மகளிர் அணி நிர்வாகி ஹேமா முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளர்களாக த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சூரியநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கோலப்பபோட்டி மியூசிக்கல் சேர், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழா நிறைவில் அனைவருக்கும் சமபந்தி விருந்து நடந்தது.l செய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட சால்ட் ரோடு பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள், நடன போட்டி, பேச்சு போட்டி கவிதை போட்டி உள்ளிட்ட கலை நிகழ்சிகள் நடத்தப்பட்டன. குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது.வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை