உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலை விபத்தில் இளைஞர் பலி

சாலை விபத்தில் இளைஞர் பலி

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 24. ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.நேற்று காலை, வழக்கம் போல, 'டியோ' இருசக்கர வாகனத்தில், சேந்தமங்கலம் அருகில் சென்ற போது, பின்னால் வந்த, 'ஈச்சர்' லோடு வாகனம், மோதியது. இதில், கார்த்திக் நிலைதடுமாறி சாலையில் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலுார் போலீசார், கார்த்திக்கின் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காகஅனுப்பி வைத்துவிசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை