மேலும் செய்திகள்
இன்று இனிதாக (26.02.2025) திருவள்ளூர்
26-Feb-2025
திருத்தணி, திருத்தணி முருகன் மலைக்கோவிலில் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு கால பூஜைகள் மற்றும் 1,008 சங்காபிஷேகம் நடந்தன. நேற்று மாலை 6:00 மணிக்கு மூன்று யாகசாலை அமைத்து கணபதி ஹோமம் நடந்தது.தொடர்ந்து, மூலவருக்கு முதற்கால சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தன. இரவு 10:00 மணிக்கு இரண்டாம் கால அபிஷேகம், சிறப்பு பூஜை மற்றும் 1,008 சங்காபிஷேகம் நடந்தன.இரவு 11:00 மணிக்கு மூலவருக்கு மூன்றாம் கால சிறப்பு அபிஷேகம், பூஜையும் நடந்தது. நள்ளிரவு 12:00 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு நான்காம் கால அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுதும் கோவில் நடை திறந்திருந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மூலவரை வழிபட்டனர்.
26-Feb-2025