மேலும் செய்திகள்
இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணை
15-Mar-2025
செங்கல்பட்டு, ஊரக வளர்ச்சித் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கு, 12 பேருக்கு பணி நியமன ஆணையை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, 12 இளநிலை உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அதன் பின், மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம், அச்சிறுபாக்கம், காட்டாங்கொளத்துார், திருக்கழுக்குன்றம், லத்துார், மதுராந்தகம், திருப்போரூர், சித்தாமூர், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், இளநிலை உதவியாளர்கள் 12 பேருக்கு பணி நியமன ஆணையை, கலெக்டர் அருண்ராஜ், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் வழங்கினார். கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
15-Mar-2025