உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதபோதகர் வீட்டில் 15 சவரன் திருட்டு

மதபோதகர் வீட்டில் 15 சவரன் திருட்டு

ஊரப்பாக்கம், ஊரப்பாக்கத்தில், கிறிஸ்தவ மத போதகர் வீட்டில், 15 சவரன் நகை, 30,000 ரூபாய் திருடிச்சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கம், பிரியா நகர், 3வது தெருவில், வாடகை வீட்டில் வசித்து வருபவர் ரிச்சர்ட் ஆனந்த், 33; கிறிஸ்தவ மத போதகர். இவரது மனைவி ரோஸ்மின்.நேற்று முன்தினம், மாலை 6:30 மணியளவில், தம்பதி வீட்டை பூட்டிவிட்டு, அதே பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்குச் சென்றனர்.பின், நேற்று காலை 9:00 மணியளவில் மீண்டும் வீட்டிற்குத் திரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு, இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு படுக்கை அறையில், பீரோவில் வைத்திருந்த 15 சவரன் நகை மற்றும் 30,000 ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது.சம்பவம் குறித்து ரிச்சர்ட் ஆனந்த், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், அக்கம் பக்கம் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள், கைரேகை தடயங்களை சேகரித்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ