மேலும் செய்திகள்
தலைமை ஆசிரியர் வீட்டில் 17 சவரன் நகை திருட்டு
28-Aug-2025
சேலையூர்;மாடம்பாக்கத்தில் ஆசிரியர் தம்பதி வீட்டில் 15 சவரன் நகைகள், 1.50 லட்சம் ரூபாய் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சேலையூர் அடுத்த மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் ஜோசப், 37. இவரது மனைவி லயோலா மேரி, 34. இருவரும் தனியார் பள்ளி ஆசிரியர்கள். இவர்கள், நேற்று முன்தினம் காலை வெளியே சென்று, மாலை வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 15 சவரன் நகைகள் மற்றும் 1.50 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சேலையூர் போலீசார், தடயங்களை சேகரித்து திருடர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
28-Aug-2025