மேலும் செய்திகள்
பொது அனகாபுத்துார் அருகே 140 கிலோ கஞ்சா பறிமுதல்
10-Apr-2025
நாயை அடித்து கொன்ற ராணுவ வீரர் மீது புகார்
10-Apr-2025
பல்லாவரம்:பல்லாவரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், வடமாநில இளைஞர்களை குறிவைத்து, ஒரு கும்பல் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பல்லாவரம் போலீசார், ஜமீன்பல்லாவரம், குளத்துமேடு, வேம்புலியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில், நேற்று முன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அந்த வீட்டில் சட்டவிரோதமாக, 150 கிலோ குட்கா மற்றும் ஒரு கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பதுக்கி வைத்திருந்த தங்ககணபதி, 29, பொன்ராஜ், 39, ஆகிய இருவரை கைது செய்தனர்.விசாரணையில், கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து, குறைந்த விலைக்கு குட்கா மற்றும் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில், வட மாநில இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
10-Apr-2025
10-Apr-2025