உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 16 சவரன் நகை திருடியவர் கைது

16 சவரன் நகை திருடியவர் கைது

பம்மல்:பம்மல் அடுத்த பொழிச்சலுாரைச் சேர்ந்த ராமசாமி, ஜூலை 6ம் தேதி, மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றார். மறுநாள் காலை வீடு திரும்பிய போது, பீரோவில் இருந்த 16 சவரன் நகை, 60,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. சங்கர் நகர் போலீசார் விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட கவுல்பஜார், அண்ணா தெருவைச் சேர்ந்த பாலாஜி, 44, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். 16 சவரன் நகையை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ