உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 2 கோவில் உண்டியலை உடைத்தவருக்கு கம்பி

2 கோவில் உண்டியலை உடைத்தவருக்கு கம்பி

செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கப்பிவாக்கம் கிராமத்தில், கற்பக விநாயகர் கோவிலும், சேம்புலிபுரம் கிராமத்தில் கெங்கையம்மன் கோவிலும் உள்ளன.நேற்று முன்தினம் இரவு, இவ்விறு கோவில்களின் உண்டியலை உடைத்து, மர்ம நபர் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர், சூணாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.சந்தேகப்படும்படி சென்ற மர்ம நபரின் டூவீலர் குறித்து, அங்கிருந்தோர் கூறிய தகவலின்படி விசாரித்ததில், அரசூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன், 28, என்பவர் உண்டியலை உடைத்தது தெரிந்தது.இதையடுத்து, பிரபாகரனை கைது செய்த போலீசார், செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை