உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின் இணைப்பிற்கு லஞ்சம் பெற்ற அரசு ஊழியருக்கு 2 ஆண்டு சிறை

மின் இணைப்பிற்கு லஞ்சம் பெற்ற அரசு ஊழியருக்கு 2 ஆண்டு சிறை

செங்கல்பட்டு:வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில், இளநிலை உதவியாளருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது.சென்னை, நங்கநல்லுாரைச் சேர்ந்த வெங்கிட்ட நாராயணன் என்பவர், தன் வீட்டிற்கு, ஒருமுனை மின் இணைப்பிலிருந்து, மும்முனை மின் இணைப்பிற்காக, 2010 ஜூலை 3ம் தேதி, நங்கநல்லுார் கங்கா நகர் மின்வாரிய அலுவலகத்தில், இளநிலை உதவியாளர் வெங்கடேசனிடம், மனு அளித்தார்.மும்முனை இணைப்பு வழங்க, தனக்கு 3,500 ரூபாய் தரவேண்டும் என, வெங்கடேசன் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாதவர், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய 3,500 ரூபாயை, வெங்கடேசனிடம் கொடுத்த போது, மறைந்திருந்த போலீசார், வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார், செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வழக்கை மாற்றம் செய்தனர். இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடந்தது.இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், வெங்கடேசனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை