மேலும் செய்திகள்
6 தாலுகாவில் நாளை ரேஷன்கார்டு திருத்த முகாம்
24-Jan-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாவில், ரேஷன் கார்டு திருத்தம் சிறப்பு முகாம், நேற்று நடந்தது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் திருத்தம் மற்றும் மொபைல் எண் சேர்த்தல் என, 205 மனுக்கள் வரப்பெற்றன.இந்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. திருக்கழுக்குன்றம் அடுத்த சத்யா நகரில் நடந்த முகாமில், 12 இருளர்கள் ரேஷன் கார்டு கோரி மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்ட வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
24-Jan-2025