| ADDED : ஜன 03, 2026 05:32 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில், 21ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லுாரி வளாகத்தில், 21ம் ஆண்டு விளையாட்டு விழா, செங்கல்பட்டு சப் - கலெக்டர் மாலதி ஹெலன் தலைமையில், கடந்த 30ம் தேதி நடந்தது. கல்லுாரி தாளாளர் விகாஸ் சுரானா முன்னிலை வகித்தார். சென்னை பல்கலையின் கல்லுாரி மேம்பாட்டு மன்ற முதன்மை அதிகாரி உத்தம் குமார் ஜமதக்னி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். கல்லுாரி மாணவியருக்கு ஓட்டப்பந்தயம், கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற 450 மாணவியருக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய 50 மாணவியருக்கு, நிர்வாக குழுமத்தினர் உதவித்தொகை வழங்கினர். விளையாட்டில், தனிநபர் வெற்றி கேடயத்தை, இரண்டாம் ஆண்டு வணிகவியல் மாணவி பதிபூரணம் வென்றார். மேலும், ஒட்டுமொத்த வெற்றி கேடயத்தை, 'அன்னுராணி ஹவுஸ்' வென்றது. கல்லுாரி முதல்வர் அருணாதேவி, எம்பவர்மென்ட் முதல்வர் மாரிசாமி, உடற்கல்வி பேராசிரியர் சங்கீதா உள்ளிட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.