மேலும் செய்திகள்
டிவிஷன் கிரிக்கெட் லீக் ரிசர்வ் வங்கி அணி வெற்றி
02-Sep-2025
சென்னை, சென்னை அட்வகேட் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், மெட்ராஸ் லீகல் அட்வகேட் அணி உட்பட மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. சென்னை அட்வகேட் பிரீமியர் லீக் கிரிக்கெட் இரண்டாவது தொடர், கடந்த 5ம் தேதி துவங்கியது. போட்டிகள், மெரினா கிரிக்கெட் மைதானம் மற்றும் சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி மைதானத்தில் நடக்கின்றன. லீகல் லையன்ஸ், எழும்பூர் பார் அசோசியேஷன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உட்பட 12 அணிகள் மோதி வருகின்றன. நேற்று முன்தினம், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளியில் நடந்த தகுதி சுற்றில், சேலஞ்சர்ஸ் அணியும் என்.ஜி.டி., அணியும் மோதின. முதலில் விளையாடிய, சேலஞ்சர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 148 ரன்களை அடித்தது. அடுத்து பேட்டிங் செய்த, என்.ஜி.டி., அணி, 17.4 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 149 ரன்களை அடித்து வெற்றி பெற்று, அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு போட்டியில், ரெட் டிராகன் அணி, 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு, 223 ரன்களை அடித்தது. அடுத்து விளையாடிய, டீம் சி.வி., லெவல் அணி, 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஏழு விக்கெட் இழப்புக்கு, 199 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியடைந்தது. அதேபோல், மெட்ராஸ் லீகல் அட்வகேட் அணி, 18 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு, 168 ரன்களை அடித்தது. அடுத்து பேட்டிங் செய்த, எழும்பூர் ராயல் ரேஞ்சர்ஸ் அணி, 18 ஓவர்களில் எட்டு விக்கெட் இழந்து, 153 ரன்களை அடித்து தோல்வியடைந்தது. அனைத்து தகுதி சுற்றுகள் அடிப்படையில், மெட்ராஸ் லீகல் அட்வகேட், என்.ஜி.டி., மற்றும் ரெட் டிராகன் அணிகள், நாளை மறுநாள் நடக்கும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
02-Sep-2025