உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தெரு நாய்கள் கடித்து 3 வயது புள்ளி மான் பலி

தெரு நாய்கள் கடித்து 3 வயது புள்ளி மான் பலி

மேல்மருவத்துார்,சோத்துப்பாக்கத்தில், தெருநாய்கள் கடித்து, 3 வயது ஆண் புள்ளி மான் பலியானது. சோத்துப்பாக்கம் பகுதியில் செய்யூர் - போளூர் நெடுஞ்சாலை ஓரத்தில் நேற்று காலை, புள்ளி மான் ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்தது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்த மானை கைப்பற்றி, பிரேத பரிசோதனை செய்து, காப்புக்காட்டில் புதைத்தனர். பிரேத பரிசோதனையில், அது 3 வயதுடைய ஆண் புள்ளி மான் என்பதும், தெரு நாய்கள் கடித்து இறந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ