உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கானா பாடல் பாடியவரை தாக்கிய 4 பேர் கைது

கானா பாடல் பாடியவரை தாக்கிய 4 பேர் கைது

பல்லாவரம்,:இறுதிச்சடங்கு நிகழ்வில் கானா பாடல் பாடிய வாலிபரை தாக்கிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பல்லாவரம், மலங்கானந்தபுரம், மசூதி சாலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில், இறந்தவரின் இறுதி சடங்கு, நேற்று முன்தினம் நடந்தது. இதில், அதே பகுதியை சேர்ந்த சிவா, 26, என்பவர், இரங்கல் தெரிவிக்கும் வகையில் கானா பாடல் பாடியுள்ளார். அப்போது, கானா பாடல் பாடுவதற்கு இளைஞர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் ஏற்பட்ட தகராறில், அங்கிருந்த நான்கு பேர் சேர்ந்து, சிவாவை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சிவா, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். பல்லாவரம் போலீசார் வழக்கு பதிந்து, சிவாவை தாக்கிய சஞ்சய், 25, சசி, 28, உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி