உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஐபோன் போலி ஸ்பேர் விற்ற 4 பேர் சிக்கினர்

ஐபோன் போலி ஸ்பேர் விற்ற 4 பேர் சிக்கினர்

சென்னை, 'ஐபோன்' போலி உதிரி பாகங்கள் விற்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் 'ஐபோன்' போலி உதிரி பாகங்கள் விற்கப்படுவதாக, எழும்பூரில் உள்ள, அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீசுக்கு புகார் சென்றது. அதன்படி, சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள, ரிச்சி தெருவில், நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அங்கு, 'ஆப்பிள்' நிறுவன ஐபோன்களின் போலி உதிரி பாகங்களை விற்ற, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நிதேஷ் ஜெயின், 35, ரமேஷ்குமார், 32, உத்தம்குமார், 38, ஜெதாராம், 32, ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து போலி உதிரி பாகங்கள் வாங்கி வந்து, சென்னையில் விற்று வந்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து, 3.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை