சீருடை பணியாளர் தேர்வு செங்கையில் 417 பேர் ஆப்சென்ட்
மாமல்லபுரம்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர், சிறை வார்டன் ஆகிய பணிகளுக்கான தேர்வை, நடத்தியது. செங்கல்பட்டு மாவட்டத்தில், பையனுார், ஆறுபடைவீடு தொழில்நுட்பக் கல்லுாரி, படாளம், கற்பக விநாயகா பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளி ஆகிய இடங்களில், இத்தேர்வு நடந்தது. மொத்தம் 2002 பேர் தேர்வு எழுதி, 417 பேர் பங்கேற்காததாக, போலீசார் தெரிவித்தனர்.