உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வண்டலுார் பூங்காவிற்கு 3 நாளில் 42,000 பேர் வருகை

வண்டலுார் பூங்காவிற்கு 3 நாளில் 42,000 பேர் வருகை

தாம்பரம்:ஆயுத பூஜை விடு முறையை முன்னிட்டு, வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, மூன்று நாட்களில், 42,000 பேர் வருகை புரிந்து, விலங்குகளை கண்டு ரசித்தனர். ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்ப, போதிய வசதிகள் செய்யப்பட்டன. அதன்படி, அக்., 1ம் தேதி - 12,000, அக்., 2ம் தேதி - 20,000, நேற்று - 10,000 பேர் என, கடந்த மூன்று நாட்களில், 42,000 பேர், இப்பூங்காவிற்கு வருகை புரிந்து, விலங்குகளை கண்டு ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !