உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீட்டின் பூட்டை உடைத்து பேரமனுாரில் 5 சவரன் ஆட்டை

வீட்டின் பூட்டை உடைத்து பேரமனுாரில் 5 சவரன் ஆட்டை

மறைமலை நகர்:மறைமலை நகர் அருகே, தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து, ஐந்து சவரன் தங்க நகைகளை திருடியவர்களை, போலீசார் தேடி வருகின்றனர். மறைமலை நகர் அடுத்த பேரமனுார் விக்னேஷ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா, 40. இவர், பொத்தேரி பகுதியிலுள்ள தனியார் கல்லுாரி விடுதியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை இளையராஜா வேலைக்குச் சென்ற நிலையில், அவரது மனைவி இளவரசி,35, மதியம் 12:00 மணியளவில், பொத்தேரி பகுதியிலுள்ள தனியார் பல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றுள்ளார். மதியம் 2:00 மணியளவில், மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ஐந்து சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரிந்தது. தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் குற்றவியல் போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை