அக்னி வீரர்கள் தேர்வு 5,000 பேர் பங்கேற்பு
தாம்பரம்:மேற்கு தாம்பரம் விமான படை மைதானத்தில், நடந்த அக்னி வீரர்கள் தேர்வு முகாமில், 5,000 பேர் பங்கேற்றனர்.இந்திய விமானப்படையின் அக்னி வீரர்கள் தேர்வு, நேற்று துவங்கியது. இந்த தேர்வு, வரும் 30 மற்றும் செப்., 2, 5 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த, 5,000 பேர், மேற்கு தாம்பரம் விமான படை வளாகத்தில் கூடினர். வரும் 30ம் தேதி கேரளா, கர்நாடகா மாநிலத்திற்கு தேர்வு நடக்க உள்ளது. அதன்பின், செப்., 2ம் தேதி, தமிழகம் மற்றும் 5ம் தேதி பெண்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறும்.