உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 52 கிலோ குட்கா பறிமுதல் செய்யூரில் இருவர் கைது

52 கிலோ குட்கா பறிமுதல் செய்யூரில் இருவர் கைது

செய்யூர் செய்யூரில் ஆட்டோவில் குட்கா கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 52 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர்.செய்யூர்-போளூர் மாநில நெடுஞ்சாலை வழியாக குட்கா கடத்தி வரப்படுவதாக செய்யூர் போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து நல்லுார் சாலை சந்திப்பில் நேற்று காலை 10:00 மணிக்கு செய்யூர் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் எஸ்.ஐ., வினோத்ராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.மதுராந்தகத்தில் இருந்து செய்யூர் நோக்கி வந்த டாடா மேஜிக் ஆட்டோவை சோதனை செய்தபோது, 52 கிலோ குட்கா கடத்தி வரப்பட்டது தெரிந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட செய்யூர் பகுதியை சேர்ந்த அந்தோனி செல்வராஜ், 53; மற்றும் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ரவிகுமார், 37 இருவரையும் கைது செய்து, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை