உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 62 புதுச்சேரி மது பாட்டில்கள் சாஸ்திரம்பாக்கத்தில் பறிமுதல்

62 புதுச்சேரி மது பாட்டில்கள் சாஸ்திரம்பாக்கத்தில் பறிமுதல்

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் பகுதியில், வில்லியம்பாக்கம் செல்லும் சாலையில், செங்கல்பட்டு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களை மடக்கி சோதனை நடத்தினர். அதில், 62 புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்து நடத்திய விசாரணையில், மூவரும் வில்லியம்பாக்கம் பகுதியை சேர்ந்த சசிகுமார், 25, விக்னேஷ், 30, ருத்ரகோட்டி, 19, என்பது தெரிய வந்தது. மகேந்திரா சிட்டி பகுதியில் இருந்து, மது பாட்டில்களை வாங்கி வந்ததாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை