மேலும் செய்திகள்
வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகைகள் திருட்டு
27-Sep-2025
சித்தாமூர்:சித்தா மூரில், துாங்கிக் கொண்டிருந்த கூலித்தொழிலாளி வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து அதிலிருந்த 6.5 சவரன் நகையை திருடிச் சென்றனர். சித்தாமூர் அடுத்த ஓம்சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி, 62; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு கதவை திறந்து விட்டு, குடும்பத்தினருடன் வீட்டின் வெளியே துாங்கியுள்ளார். காலை 5:00 மணியளவில், படுக்கை அறையில் மின்விளக்கு எரிவதைக் கண்டு, உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த தங்க மோதிரம், தாலி செயின், கம்மல், நெக்லஸ் உள்ளிட்ட 6.5 சவரன் நகையை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரி ந்தது. அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
27-Sep-2025