மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டு உடைத்து நகை, பணம் திருட்டு
23-Mar-2025
ஊரப்பாக்கம் ஊராட்சி தரம் உயர்த்த கோரிக்கை
10-Mar-2025
ஊரப்பாக்கம்:ஊரப்பாக்கம் அருகே, ரயில்வே ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.ஊரப்பாக்கம், பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் டிக்காரம், 39; காட்டாங்கொளத்துார் ரயில் நிலையத்தில், பயணச் சீட்டு வழங்கும் ஊழியர்.இவர், குடும்பத்துடன் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்குச் சென்று, வீடு திரும்பினார்.அப்போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த ஏழரை சவரன் தங்க நகைகள் மற்றும் 48,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது.இதுகுறித்து, கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் டிக்காராம் புகார் அளித்தார்.புகாரின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
23-Mar-2025
10-Mar-2025