உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பார்க்கிங்கில் காரை நிறுத்த சொன்ன செக்யூரிட்டிக்கு சரமாரி அடிஉதை

பார்க்கிங்கில் காரை நிறுத்த சொன்ன செக்யூரிட்டிக்கு சரமாரி அடிஉதை

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதங்கள் சிற்பங்கள் அருகில், மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழும நிர்வாகத்தின்கீழ், கைவினைப் பொருட்கள் வணிக வளாகம் மற்றும் சுற்றுலா வாகன நிறுத்துமிடம் உள்ளது.சுற்றுலா பயணியர், வாகன நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, வணிக வளாகம் வழியே, சிற்பங்களை காண செல்ல வேண்டும்.பயணியர் பலர், வாகனத்தை நிறுத்துமிடத்தில் நிறுத்தாமல், சிற்பங்கள் அருகில் நிறுத்திவிட்டு செல்வதால், குறுகிய சாலையில் நெரிசல் ஏற்படுகிறது. பயணியரும் கடைக்கு வருவதில்லை.இதை தவிர்க்க, வளாக வியாபாரிகள், வெண்புருஷம் மீனவ பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, 40, என்பவரை, செக்யூரிட்டி பணிக்கு ஏற்பாடு செய்து உள்ளனர்.பிரதான சாலையில், வாகன நிறுத்துமிட நுழைவிடத்தில் நிற்கும் அவர், சிற்ப பகுதிக்கு சுற்றுலா வாகனம் செல்லாமல் தடுத்து, நிறுத்துமிடத்திற்கு அனுப்புவார். நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு, அங்கு வந்த ஒரு காரை தடுத்து, நிறுத்துமிடம் செல்லுமாறு அறிவுறுத்தினார்.காரில் வந்த பயணியர், அவரிடம் தகராறு செய்தனர். அவர் காரை மறித்ததால் ஆத்திரமடைந்த இரண்டு ஆண்கள் மற்றும் பெண்கள், அவரை கீழே தள்ளி, அவரிடமிருந்த பிளாஸ்டிக் பைப்பை பிடுங்கி, அவரை சரமாரியாக தாக்கினர்.இதில், அவருக்கு முகம், முதுகு ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. அதைக் கண்ட அப்பகுதியினர், தாக்குதலை தடுத்து, அவரை மீட்டனர். அவரை தாக்கிய வீடியோ காட்சி, நேற்று சமூக ஊடகங்களில் பரவியது. இதுகுறித்து, யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை