உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்றவர் பலி

நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்றவர் பலி

செய்யூர்:செய்யூர் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால், 44. விவசாயி.நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, பவுஞ்சூரில் இருந்து தனது ஸ்பிளண்டர் இருசக்கர வாகனத்தில், புதுப்பட்டு நோக்கி சென்றுகொண்டு இருநதார்.இரணியசித்தி ஏரிக்கரை அருகே சென்றபோது, திடீரென நாய் குறுக்கே வந்ததால், நாய் மீது மோதிய டூ - வீலர் கட்டுப்பாட்டை இழந்து, நிலைதடுமாறி கீழே விழுந்தார்.இதில் பலத்த காயமடைந்த ஜெயபாலை, அந்த வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலை 9:30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.விபத்து குறித்து, செய்யூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி