மேலும் செய்திகள்
குழாய் வழியாக கிணற்றில் இறங்கிய முதியவர் சாவு
07-Sep-2024
செய்யூர்:செய்யூர் அருகே பெரிய வெண்மணி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏரிக்கு நடுவே, கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யும் கிணறு உள்ளது.கோடை காலத்தில் குடிநீர் கிணற்றில் போதிய தண்ணீர் இல்லாமல், பொதுமக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக, குடிநீர் கிணறு துார் வாரும் பணி, சில தினங்களாக நடந்து வந்தது.இந்நிலையில், நேற்று நாகமலை கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி, 45, என்பவர், துார் வாரும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கிணற்றில் அமைக்கப்பட்டு இருந்த மேல்தள மூடி இடிந்ததால், ரங்கசாமி தவறி கிணற்றில் விழுந்தார்.இதில், தலை, மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் வேலை செய்தவர்கள், அவரை மீட்டு, செய்யூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு, ரங்கசாமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து, செய்யூர் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருந்துவமனைக்கு அனுப்பி, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
07-Sep-2024