உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மணிமங்கலத்தில் தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம கும்பலால் பீதி ரோந்து பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

மணிமங்கலத்தில் தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம கும்பலால் பீதி ரோந்து பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

மணிமங்கலம்:தாம்பரம் போலீஸ் கமிஷனரக எல்லையில், மணிமங்கலம் காவல் நிலையம் உள்ளது. இதன் எல்லையில் உள்ள புஷ்பகிரி பகுதியில், சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன.இப்பகுதியில் சம்பந்தமே இல்லாமல் சுற்றித்திரியும் மர்ம நபர்கள், இரவில் தனியாக முதியோர் இருக்கும் மற்றும் யாரும் இல்லாத வீடுகளில் புகுந்து, நகை, பொருட்கள், பணம், மொபைல் போன் ஆகியவற்றை திருடி செல்கின்றனர்.அதிலும், இம்மாதத்தில் மட்டும் அதிகமான திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. புஷ்பகிரியில் திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளது தொடர்பாக, ஏற்கனவே மணிமங்கலம் காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.அந்த சமயத்தில் ரோந்து வந்த போலீசார், தற்போது வருவது இல்லை. மேலும், தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிப்பதிலும் அக்கறை காட்டவில்லை. இதனால், இரவில் பயந்து பயந்து துாங்கும் நிலைமைக்கு, அப்பகுதிவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டால், பெரிய அளவில் திருட்டு சம்பவங்கள் மட்டுமின்றி, கொலை கூட நடக்க வாய்ப்புள்ளது.எனவே, இவ்விஷயத்தில், தாம்பரம் துணை கமிஷனர் தலையிட்டு, புஷ்பகிரி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களை கைது செய்து, பொதுமக்கள் பாதுகாப்புடன் வசிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ