உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு பள்ளிக்கு ரூ.12 லட்சத்தில் சுற்றுச்சுவர்

அரசு பள்ளிக்கு ரூ.12 லட்சத்தில் சுற்றுச்சுவர்

மாமல்லபுரம்,மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி, கொக்கிலமேடு பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியில், சென்னை அணுமின் நிலையத்தின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், 1.15 கோடி ரூபாய் மதிப்பில், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு, ஓராண்டிற்கு முன் துவக்கப்பட்டது.புதிய கட்டடம் கட்ட, கட்டுமான பொருட்களை பள்ளி வளாகத்திற்குள் கொண்டுசெல்ல, சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. இந்த சுற்றுச்சுவரை கட்டித் தருமாறு, அணுமின் நிலைய நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். நம் நாளிதழிலும் இதுகுறித்து செய்தி வெளியானது. இதையடுத்து, அணுமின் நிலைய நிர்வாகம் பரிசீலித்து, 12 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்ட, நிதி அளித்தது. ஊரக வளர்ச்சி நிர்வாகம் சார்பில், தற்போது சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை