கொடூர் ஊராட்சியில் சாலை அமைக்க வேண்டுகோள்
பவுஞ்சூர்,:பவுஞ்சூர் அருகே கொடூர் ஊராட்சியில், 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட அரசு ஆரம்பப் பள்ளியின் பின்புறம் உள்ள குடியிருப்புப் பகுதியில், சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.சாலை வசதி இல்லாததால், மழை காலத்தில் தெருக்களில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாய் மாறுகிறது. இதனால், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக சிரமப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.