நிழற்கூரை அமைக்க வேண்டுகோள்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தில், தமிழ்நாடு மின் வாரிய உதவி பொறியாளர் பிரிவு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நிழற்கூரை அமைக்கப்படாததால், அலுவலகம் வரும் நுகர்வோர், மழை, வெயிலில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இதனை தவிர்க்க, நிழற்கூரை அமைக்க வலியுறுத்தி, மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நுகர்வோர் மனு அளித்துள்ளனர்.இந்த மனு மீது நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, நுகர்வோர்கள் நலன்கருதி, நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.