கார் மோதி டூ-வீலரில் சென்றவர் பலி
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த ஜமீன்எண்டத்துார் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார், 33. கூலித் தொழிலாளி. இவர், நேற்று வேலைக்கு சென்று, தனது பேஷன் ப்ரோ இருசக்கர வாகனத்தில், மதுராந்தகத்தில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.சித்தாமூர் அடுத்த சிறுநல்லுார் கிராமத்தில் சென்று கொண்டு இருந்தபோது, எதிரே வந்த கார் மோதியதில், தலையில் பலத்த காயமடைந்து, உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சம்பவ இடத்திற்கு சென்ற சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிந்து, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.