உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / துாங்கிய பெண்ணிடம் வீடு புகுந்து நகை திருட்டு

துாங்கிய பெண்ணிடம் வீடு புகுந்து நகை திருட்டு

குரோம்பேட்டை:குரோம்பேட்டை, பாரதிபுரம் வள்ளுவர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் மூர்த்தி. தள்ளுவண்டியில் பழம் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று அதிகாலை, வியாபாரத்திற்கு பழம் வாங்க, மகனுடன் கோயம்பேடு சந்தைக்குச் சென்றார். அப்போது, மூர்த்தியின் மனைவி சுமதி, 42, மட்டும், வீட்டில் தனியாக துாங்கிக் கொண்டிருந்தார்.அதிகாலை, 4:30 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர், பீரோவில் இருந்த நான்கரை சவரன் நகையை திருடியதுடன், தோடு, சுமதியின் அரை சவரன் செயினை அறுத்து தப்பினர். சிட்லப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை