உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நண்பர்களுடன் கிணற்றில் குளித்த வாலிபர் பலி

நண்பர்களுடன் கிணற்றில் குளித்த வாலிபர் பலி

திருப்போரூர்:சென்னை, பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 36, இவரது நண்பர்கள் ஸ்டாலின்,35, சங்கர்,35, துரைராஜ்,35. அனைவரும் ஆட்டோ ஓட்டுனர்கள்.மேற்கண்ட அனைவரும், மாலை அணிந்து சபரிமலை கோவிலுக்குச் சென்று, நேற்று வீடு திரும்பினர். வரும் வழியில், செங்கல்பட்டில் உள்ள அய்யப்பன் கோவிலில், அனைவரும் மாலையைக் கழற்றி உள்ளனர்.பின், செங்கல்பட்டில் அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.தொடர்ந்து உணவு வாங்கிக்கொண்டு, திருப்போரூர் - செங்கல்பட்டு சாலை வழியாக வீட்டிற்கு கிளம்பினர்.நேற்று மாலை 4:30 மணியளவில், கரும்பாக்கம் அருகே விவசாய கிணறு ஒன்றின் அருகே அமர்ந்து உணவு சாப்பிட்டுவிட்டு, அதே கிணற்றில் குளித்துள்ளனர். அப்போது, செந்தில்குமார் கிணற்றின் கரைப் பகுதியிலிருந்து குதித்த போது, உள்ளே சென்றவர் வெளியே வரவில்லை. நண்பர்கள் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த திருப்போரூர் போலீசார், செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் செந்தில்குமாரை தேடி சடலமாக உடலை மீட்டனர்.மீட்கப்பட்ட உடலை, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !