மேலும் செய்திகள்
கடை பூட்டை உடைத்து ரூ.15,000 திருட்டு
27-Aug-2025
மறைமலை நகர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை சிறுமி இயற்கை உபாதை கழிக்க வீட்டின் அருகில் உள்ள மறைவான பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 40 வயதுள்ள நபர் சிறுமியின் வாயை பொத்தி துாக்கி சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார். சிறுமி கூச்சலிட்டதால், அவர் சிறுமியை கையால் தாக்கி விட்டு தப்பிச் சென்றார். சிறுமி பெற்றோரிடம் கூறியதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மறைமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்.
27-Aug-2025