பணிக்கு சென்ற இளம்பெண் மாயம்
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட, 19 வயது இளம்பெண், மறைமலைநகரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.கடந்த, 2ம் தேதி, வழக்கம் போல பணிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். பின், வீடு திரும்பவில்லை.இதுகுறித்து, அவரது பெற்றோர் அளித்த புகாரின்படி, அச்சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.